மோடியை வரவேற்க தயாராகும் அமெரிக்கா

வாஷிங்டன்: இந்திய பிரதமராக அமெரிக்கா செல்லும் நரேந்திர மோடியை வரவேற்க அங்குள்ள 300க்கும் மேற்பட்ட இந்திய - அமெரிக்க அமைப்புகள் ஒன்றிணைந்துள்ளன. வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள ஐ.நா., பொதுசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார். தனது அரசு பணிகளுக்குப்பின், மன்ஹாட்டன் நகரில் உள்ள மடிசன் சதுக்க பூங்காவில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அமெரிக்கா வாழ் இந்தியர்களிடம் அவர் உரையாற்றுகிறார். இதற்கான பணியில், அங்குள்ள 300க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் அமெரிக்க அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதற்கென இந்திய அமெரிக்க கம்யூனிட்டி பவுண்டேசன் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பிரதமர் ஒருவர் வெளிநாட்டில் பேசும் மிகப்பெரிய பொதுக்கூட்டமாக இது இருக்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Comments