சுதந்திர தினத்தன்று பெட்ரோல் விலை குறையும்?

புதுடில்லி : சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைந்துள்ளதை அடுத்து, பெட்ரோல் விலையை குறைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக, இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் பி.அசோக் கூறியதாவது: சர்வதேச சந்தையில், பெட்ரோலிப் பொருட்களின் விலை சரிவடைந்துள்ளது. இதன் காரணமாக, இம்மாதம் 1ல், பெட்ரோல் விலை லிட்டருக்கு, 1 ரூபாய் வரை குறைக்கப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலையை மேலும் குறைப்பது குறித்து, தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். சுதந்திர தினத்தன்று விலை குறைப்பு வெளியாகலாம். எவ்வளவு குறைக்கப்படும் என தற்போது கூற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார். பெட்ரோலிய நிறுவனங்கள், மாதம் இரு முறை பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம் குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. இம்மாதம், 1ம் தேதி, பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது.

Comments