முதல்வரால் பெயரிடப்பட்ட குட்டி யானை காவேரி மரணம்

ஊட்டி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் பெயரிடப்பட்டு, முதுமலை யானைகள் முகாமில் வளர்ந்து வந்த குட்டி யானை காவேரி (3) இன்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முனபு இந்த யானைக்கு முதல்வர் ஜெயலலிதா காவேரி என பெயர் சூட்டியிருந்தார். கடந்தாண்டு ஜூன் மாதம் முதல்வர் முதுமலை புலிகள் காப்பகத்தை பார்வையிடச் சென்ற போது, அவருக்கு வரவேற்பளித்த காவேரி, பின்னர் அங்கு திரண்டிருந்த கூட்டத்தை பார்த்து மிரண்டு முதல்வரை தனது துதிக்கையால் இடித்து தள்ளியது குறிப்பிடத்தக்கது.

Comments