காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ளதால், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரியில் அதிக அளவு தண்ணீர் வருவதால், இன்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106 அடியாக உள்ளது. இதையடுத்து நாளை முதல் காவிரியில் தண்ணீர் திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், தொடர் நீர்வரத்து காரணமாக, ஓரிரு நாட்களில் அணை முழுவதும் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதால், மேட்டூர் அணையை ஒட்டியுள்ள காவிரி கரையோர பகுதிகளான தங்கமாபுரி பட்டணம், பெரியார் நகர் ஆகிய இடங்களில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, வருவாய்த்துறையினர் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.

Comments