சென்னை: தமிழகத்தில் குற்றங்களை குறைக்க முடியுமே தவிர ஒழிக்க
முடியாது என சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். காவல்துறை
மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய முதல்வர் ஜெயலலிதா, மக்கள்
தொகை பெருக்கம், தொழில்நுட்ப வளர்ச்சி இவற்றின் காரணமாக குற்றங்கள் பெருகி
வருகின்றன. தமிழகத்தில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளன. சர்க்கரை நோய் போல்
குற்றங்களை குறைக்க முடியுமே தவிர முற்றிலும் ஒழித்து விட முடியாது.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
Comments