புதுடில்லி: நான் சர்வாதிகாரியாக இருந்திருந்தால், கீதையை பள்ளிகளில்
கட்டாயம் இடம் பெறச் செய்திருப்பேன் என சுப்ரீம் கோர்ட் நீதிபதி தவே கூறி
உள்ளார். இவரது கருத்தை வரவேற்றுள்ள ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பரமேஸ்வரன்
கூறுகையில், 'கீதை பொதுவானது. கீதையை தனது தாயாக மதித்ததாக காந்தி கூறி
உள்ளார். உலகின் தற்போதுள்ள பிரச்னைகளுக்கு கீதை தீர்வளிக்கும்.
இந்நிலையில், கீதையை தேசிய புத்தகமாக அறிவிக்க வேண்டும்,' என்று கோரி
உள்ளார்.
Comments