மேட்டூர் : கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காவிரி
டெல்டா பாசனத்திற்கென மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து
விடப்பட்டது. இதனையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணைக்கு 89 ஆயிரத்து 723 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக நீர் மட்டம் அதிகரித்தது. தற்போது நீர் மட்டம் 109.13அடி என்ற அளவில் உள்ளது.
நீர் இருப்பு 77.18 டி.எம்.சி., நீர் வரத்து 43 ஆயிரம் கன அடியாக
உள்ளது. அணை திறக்கப்பட்டுள்ளதால் 12 லட்சம் ஏக்கர் விவசாய நிலம்
பயன்பெறும். மேட்டூர் அணையில் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி நீர்
வெளியேற்றப்படுகிறது. சேலம் , ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், நாகை,
திருவாரூர் மாவட்ட விசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேட்டூர் அணைக்கு 89 ஆயிரத்து 723 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக நீர் மட்டம் அதிகரித்தது. தற்போது நீர் மட்டம் 109.13அடி என்ற அளவில் உள்ளது.
மாநில அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணை மதகை திறந்து வைத்தார். விவசாயிகள் மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர். காவிரி டெல்டா பகுதிகளின் பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டது. தற்போது அணையின் நீர் மட்டம் 108.7 அடியாக உள்ளது.
முதல்வருக்கு பாராட்டுவிழா: மேட்டூர் அணையை இன்று மாலை 4 மணிக்கு திறந்து வைத்த பின்னர் மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் பேசுகையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 ஆக உயர்த்த தமிழக முதல்வர் பெரும் முயற்சிகள் மேற்கொண்டார். அவர் சுப்ரீம் கோர்ட்டில் அணுகி அனுமதி பெற்றமைக்காக அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் பாராட்டு விழா நடக்கிறது. வரும் 22 ம் தேதி மதுரையில் இந்த விழா நடத்தப்படுகிறது.
Comments