100 'ஸ்மார்ட் சிட்டிகள்' :
அப்போது ,இந்தியாவில் ரூ.7,060 கோடி மதிப்பீட்டில் 'ஸ்மார்ட் சிட்டிகள்' என்ற பெயரில் 100 நவீன நகரங்களை உருவாக்கும் திட்டம் பற்றி சுஷ்மா சுவராஜ் விளக்கி கூறினார்.பின்னர், நீர் மேலாண்மை, நகர்ப்புற புத்துயிரூட்டல் ஆகியவற்றில் இந்தியாவுக்கு சிங்கப்பூர் உதவுவதாக தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து நடந்த 50 பொன்விழாவை துவக்கி வைத்து பேசும்போது இரு நாடுகள் இடையேயான பொருளாதார மேம்பாடு, ராணுவ ஒத்துழைப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றை வளர்ப்பதற்கான வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி பயன்படுத்தப்படும்.
அன்னியமுதலீடுகள்:'
ஆசியான்' அமைப்பில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நட்புநாடு மட்டுமின்றி, உலகளவில் அன்னிய முதலீடுகளில் முன்னணி நாடாகவும் சிங்கப்பூர் விளங்குவதாகவும். தொடர்ந்து செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம் எனவு அவர் தெரிவித்தார்.பின்னர் பேசிய சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் சண்முகம்,தூதரக ரீதியில் எங்கள் நாட்டை முதல்முதலாக அங்கீகரித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என பாராட்டினார்.
Comments