அவர்கள் உடனடியாக இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து போலீசார் அஜீத் வீட்டுக்கு விரைந்தார்கள். வெடிகுண்டு
நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
அஜீத் வீட்டில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஒவ்வொரு அறையாக சென்று
வெடி குண்டு இருக்கிறதா என்று சோதனை போட்டனர். இறுதியில் வெடிகுண்டு
எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. எனினும் அஜீத் வீட்டிற்கு பாதுகாப்பு
போடபட்டு உள்ளது.
108 நம்பருக்கு பேசி வெடி குண்டு மிரட்டல் விடுத்த நபர் எந்த போன் நம்பரில்
இருந்து தொடர்பு கொண்டார் என்று போலீசார் ஆய்வு செய்தனர். அந்த நம்பரை
கண்டு பிடித்து விட்டதாகவும் மிரட்டல் விடுத்த நபர் விரைவில் பிடிபடுவார்
என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Comments