ஐதராபாத்: புதிதாக பொறுப்பேற்ற தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ்
மகள் கவிதா மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத்,
காஷ்மீர் இரண்டையும் ஒப்பிட்டு கூறிய கருத்தால் சர்ச்சையில்
சிக்கியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் அமைய வேண்டும் என பல கட்ட போராட்டம் நடத்தி மக்களிடம் செல்வாக்கு பெற்றவர் சந்திரசேகரராவ்.
தனி மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர்
நடந்த முதல் சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று ராவ் மாநிலத்தின் முதல்
முதல்வரானார். இது போல் சமீபத்திய பார்லி., தேர்தலிலும் இவரது ராஷ்ட்டிரிய
சமிதி கட்சிக்கு அதிக இடம் கிடைத்தன.தெலுங்கானா மாநிலம் அமைய வேண்டும் என பல கட்ட போராட்டம் நடத்தி மக்களிடம் செல்வாக்கு பெற்றவர் சந்திரசேகரராவ்.
ராவின் மகள் கவிதா. இவர் கட்சியின் இளம் எம்.பி.,யாவார். இவர் ஆங்கிலநாளிதழ் நடத்திய ஒரு சிறப்பு கூட்டத்தில் பேசுகையில், காஷ்மீரும், ஐதராபாத்தும், இந்தியாவுடன் வலுக்கட்டாயமாக சேர்க்க பட்டன. 1947 ல் சுதந்திரம் அடைந்த பின்னர் இந்தியாவில் சேர்ந்தோம். அதற்கு முன்னதாக நாம் தனியாகத்தான் இருந்தோம். காஷ்மீரும், ஐதராபாத்தும் இந்தியாவின் பாகமாக இருக்கவில்லை. ஏன் இவ்வாறு இப்போதும் இருந்திருக்க கூடாது என்று நான் நினைத்தது உண்டு. 1947 க்கு பின்னர் இந்தியாவுடன் இணைந்தோம். இதில் இருந்தே பிரச்னைகள் எழ துவங்கி விட்டது. நான் காஷ்மீர் பண்டிட்கள் தொடர்பான விஷயங்களை அதிகம் படிக்க துவங்கினேன். காஷ்மீரில் பல பகுதிகள் நம்மோடு இல்லை. சர்வதேச எல்லை வரையறுக்கப்பட வேண்டியது இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதனையடுத்து பா.ஜ., வை சேர்ந்த வக்கீல் ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் மதனாபேட் போலீசார் செக்சன் 124 ஏ, 153 பி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். எதிர்ப்புகள் முற்றும் வேளையில் இந்த வழக்கில் கவிதா கைது செய்யப்பட வேண்டிய நிர்பந்தம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments