இந்திய ராணுவத்துக்கு சீனா பாராட்டு

பீஜிங்: இந்திய சீன எல்லையில் நிலவும் சூழ்நிலைகளை பாரபட்சமின்றி புரிந்து கொண்டதற்காக, இந்திய ராணுவத்தை பாராட்டுவதாக சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹூவா, இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியதாக இந்திய மீடியாக்களில் வந்த செய்திகளை சீனா கவனத்தில் கொண்டுள்ளது. இவ்விஷயத்தில் எல்லையில் நிலவும் சூழ்நிலைகளை பாரபட்சமின்றி புரிந்து கொண்ட இந்திய ராணுவத்திற்கு சீனா பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது. இவ்விஷயத்தில் இந்திய மீடியாக்களும் பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு ஹூவா தெரிவித்தார். இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியதாக தகவல் இல்லை என ராணுவ தளபதி சுஹாக் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments