மோடி சர்வாதிகாரி அல்ல: ராஜ்நாத் சிங்

புதுடில்லி: மோடி சர்வாதிகாரியோ, மதவாதியோ அல்ல என ராகுலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலளித்துள்ளார். பார்லிமென்ட்டில் ஒரே ஒரு குரலுக்கு மட்டுமே மதிப்பளிக்கப்படுவதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் தெரிவித்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிட்டு அவர் இவ்வாறு கூறியதாக தெரிகிறது. இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகாரியோ அல்லது மதவாதியோ அல்ல. இது அனைவருக்குமே நன்றாக தெரியும். இல்லையென்றால் அவருக்கு மக்கள் இவ்வளவு பெரிய வெற்றியை தந்திருக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Comments