5 பதக்கங்கள் தாயாரிப்பு:
இந்திய ஆக்கி ஜாம்பவான் தியான்சந்த், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் நீண்ட காலமாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
இது வரை பாரத ரத்னா விருதுகள்:
சுதந்திர இந்தியாவில் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த மிகச்சிறந்த குடிமகன்களுக்கு, 'பாரத ரத்னா' விருது வழங்கப்படுகிறது. இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா, முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, நோபல் பரிசு விஞ்ஞானி ராமன், ராதாகிருஷ்ணன், ராஜாஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.கடைசியாக இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், விஞ்ஞானி ராவ் ஆகியோருக்கு கடந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
இந்தநிலையில் பாரத ரத்னா பதக்கங்கள் தயாரிக்கும் ரிசர்வ் வங்கியின் நாணய தயாரிப்பு பிரிவிடம், 5 பதக்கங்கள் செய்து கொடுக்குமாறு மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. இந்திய சுதந்திர தினம் 15-ந் தேதி கொண்டாடப்படும் நிலையில், அன்று இந்த விருதுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதன் மோகன் மாளவியா:
இதைப்போல சுதந்திர போராட்ட தியாகியும், இந்து மகாசபையின் தலைவருமான மதன் மோகன் மாளவியா மீதும் நரேந்திர மோடி அதிக பற்று கொண்டவர். தேர்தலில் போட்டியிடுவதற்காக வாரணாசி தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தவுடன், மதன் மோகன் மாளவியாவின் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிறந்த கல்வியாளரான மதன் மோகன் மாளவியா, உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை நிறுவியவர் ஆவார்.
சுபாஷ் சந்திரபோஸ்:
சுதந்திர போராட்ட வீரரான சுபாஷ் சந்திரபோசுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. எனவே இந்த ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியலுக்கு அவரது பெயரும் பரிசீலிக்கப்படும் என தெரிகிறது.சுபாஷ் சந்திரபோசுக்கு கடந்த 1992-ம் ஆண்டு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரது இறப்பு தொடர்பான சர்ச்சை அப்போது எழுந்ததால், இந்த விருதை ஏற்க மறுத்தனர் அவரது குடும்பத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மீது பிரதமர் நரேந்திர மோடி,மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். தனது பேச்சில் அடிக்கடி வாஜ்பாயை நினைவு கூரும் அவர், சமீபத்தில் பார்லிமென்டில் உள்ள மத்திய மண்டபத்தில் நடந்த உரையிலும் அவரை குறித்து மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணீர் மல்க பேசினார் என்பது நினைவிருக்கலாம்.
Comments