இன்று காலை தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் காஷ்மீர் லே பகுதி சென்றடைந்தார். இங்கு ராணுவ அதிகாரிகள் பிரதமரை வரவேற்றனர். கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து அவர் உலகின் உயர்ந்த சியாச்சின் பகுதிக்கு செல்கிறார். ஜம்மு பகுதியில் பாக்., படையினர் தொடர்ந்து எல்லை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நேரத்தில் பிரதமர்மோடியின் பயணம் மிக முக்கியத்துவம் பெறுகிறது.
ஜம்மு வில் பயங்கவரவாத தாக்குதல்: இதற்கிடையில் இன்று காலை ஸ்ரீநகர் அருகே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற கான்வாயில் இந்த தாக்குதல் நடந்தது. இதில் 7 வீரர்கள் காயமுற்றனர்.
எரிசக்தி, சோலார், சுற்றுலா : நீர் மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: லே பகுதிக்கு நான் பார்லி., தேர்தல் துவங்கிய காலத்தில் இருந்து வர வேண்டும் என நினைத்து விருப்பத்துடன் இருந்தேன். லே பகுதி மக்கள் பலம் வாய்ந்தவர்கள் அன்பு மிக்கவர்கள். இந்திய குடிமக்களின் முன்மாதிரியாக உள்ள லே மக்களின் தேச பக்திக்கு நான் தலைவணங்குகிறேன். இப்பகுதி மக்கள் தேவைகள் குறித்து நான் அறிந்து வைத்திருக்கிறேன். எனது நோக்கமே எரிசக்தி, சோலார், சுற்றுலா ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்பதே. இவை முன்னேற்றம் அடையும் போது இந்த பகுதி வளர்ச்சி பெறும். இங்கு வரும் இந்த மின் திட்டங்கள் லே பகுதியில் சுற்றுச்சூழல் கெடுதல் விடுதலை பெறும். லே பகுதி குஜராத்தின் கட்ஜ் போன்று சோலார் எரிசக்தி மேம்படுத்தும் பகுதியாக வளம் பெற்றுள்ளது. லே பகுதி வளர்ச்சி அடைய நாங்கள் முழு துணையாக இருப்போம். வாஜ்பாய் காலத்தின் கனவுகளை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். முன்னாள் பிரதமராக இருந்தவர்கள் இங்கு வரவில்லை. நான் 2 முறை ஜம்மு காஷ்மீர் வந்துள்ளேன்.
நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் பெரும் இடையூறாக இருந்து வந்தது. ஊழலை ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என உங்களிடம் கேட்டு கொள்கிறேன். ஊழல் ஒழிப்போம் என்று ஆட்சிக்கு வந்துள்ளோம், இதனை நிறைவேற்றுவோம். ஊழலுக்கு எதிராக போராடி வெற்றி பெறும் போது வறுமையில் வாழும் மக்களை காப்பதில் வெற்றி பெற முடியும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
வளர்ச்சி என்பதில் உறுதியாக இருப்போம் : கார்கிலில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், கார்கில் பகுதி மக்கள் மத்தியில் பேசுவதில் நான் அதிர்ஷ்டம் செய்துள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கார்கில் பகுதியை பிற பகுதிகளுடன் இணைப்பதற்கு உரிய நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கும். குஜராத்தில் பூகம்பம் பாதித்த பகுதியில் நான் பார்வையிட சென்ற போது அங்குள்ள மக்கள் இப்பகுதியை எப்படி சூர்தூக்க போகிறீர்கள் ? வளர்ச்சியை ஏற்படுத்துங்கள் என்று கேட்டனர். பாதுகாப்பு விஷயத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் . இந்தியாவின் வளர்ச்சி என்பதில் உறுதியாக இருப்போம். நாட்டின் வளர்ச்சிக்கு முதல் இடையூறாக இருக்கும் ஊழலை விரட்டியடிக்க போராடி வருகிறோம். கார்கிலுக்கு நான் வருவது இது முதன்முறை அல்ல. நான் பா.ஜ.,வில் தொண்டனாக இருக்கும் போது கார்கிலுக்கு வந்துள்ளேன். கார்கில் பகுதி மக்கள் தேச பக்தி கொண்டவர்கள். இவ்வாறு பிரதமர் பேசினார்.
Comments