
மும்பை: ''எந்த நாடும், நம்நாட்டிற்கு சவால் விடுக்க முடியாத வகையில்,
முப்படைகளும் நவீனமயமாக்கப்படும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
உள்நாட்டிலேயே
தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய போர்க்கப்பலான, 'ஐ.என்.எஸ்., கோல்கட்டா'வை,
கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சி, மும்பையில், அந்த கப்பலின் தளத்தில்
நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, கப்பலை நாட்டுக்கு
அர்ப்பணித்த பிரதமர் நரேந்திர மோடி, கடற்படை அதிகாரிகள் மற்றும் கப்பல்
மாலுமிகள் மத்தியில் பேசியதாவது:ஒரு நாட்டின் ராணுவ பலம், மற்ற நாடுகளுக்கு
மிகப்பெரிய எச்சரிக்கையாக அமைந்து, போரை தவிர்க்க உதவும். போரிடுவதும்,
அதில் வெற்றி பெறுவதும், இந்த நாட்களில், கடினமான விஷயமே அல்ல. ஆனால், போரை
தவிர்க்க வேண்டும் எனில், ராணுவம் நவீனமயமாக்கப்பட வேண்டும். நவீன ரக
ஆயுதங்களை ராணுவத்தினர் கொண்டிருக்க வேண்டும்.ராணுவ ரீதியாக, நம்நாடு
பலமானதாக இருந்தால், யாரும், நமக்கு சவால் விடுக்க மாட்டார்கள். அதனால்,
நம் நாட்டிற்கு, எந்த நாடும் சவால் விடுக்காத வகையில், முப்படைகளையும் நாம்
நவீனமயமாக்க வேண்டும். இந்தியாவின் அறிவுசார் திறனுக்கு, 'ஐ.என்.எஸ்.,
கோல்கட்டா' ஒரு அத்தாட்சி.
Comments