ஆந்திரா சட்டசபை தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

ஐதராபாத்: ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதையடுத்து ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தொகுதி எண்ணிக்கையை அதிகரிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. தற்போது சட்ட சபையின் எண்ணி்க்கை 195 ஆகவும், மக்கள் தொகை 4 கோடியே 93 லட்சத்து 78 ஆயிரத்து 776 ஆக உள்ளது. இந்நிலையில் ஒரு தொகுதிக்கு 2 லட்சத்து 19 ஆயிரத்து 461 பேர் உள்ளபடி தொகுதிகள் பிரிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதனால் தொகுதிகளின் எண்ணிக்கை 50 இடங்கள்அதிகரித்து 225 ஆக மாற உள்ளது.அதே போல் தெலுங்கானா பகுதியிலும் சட்டசபையின் எண்ணிக்கை 113-ல் இருந்து 153 ஆக மாற உள்ளது. இரு மாநிலங்களிலும் சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட போதிலும் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட மாட்டாது என கூறப்படுகிறது.

Comments