இன்ஜினியரிங் படிப்பிற்கானகவுன்சிலிங் முடிவு

சென்னை: அண்ணா பல்கலையி்ல் நடைபெற்று வந்த இன்ஜினியரிங் படிப்புகளுக்கான கவுன்சிலிங் முடி வு பெற்றது. மொத்தமுள்ள 2 லட்சத்து 11 ஆயிரத்து 589 இடங்களுக்கு நடைபெற்ற கவுன்சிலிங்கில் ஒரு லட்சத்து 9ஆயிரத்து 79 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 510 இடங்கள் நிரம்ப வில்லை என பல்கலை வெளியிட்டுள்ள செய்திகுறி்ப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த மாதம் 7-ம் தேதி துவங்கிய கவுன்சிலிங் 28 நாட்கள் நடைபெற்றது. கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 929 பேரில் 59 ஆயிரத்து 300 பேர் பங்கேற்க வில்லை எனவும் செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments