இயற்கை எழில் கொஞ்சும் ஆலப்புழாவில் உள்ள சிற்றாறுகள் மற்றும் ஏரிகளில்
வாடகைக்கு விடப்படும் படகு இல்லங்களில் தங்கியபடி, ரம்மியமான இயற்கை
காட்சிகளை கண்டுகளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் இந்த படகு வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்குபவர்களுக்கு
விபசார அழகிகள் சப்ளை செய்யப்படுவதாக கேரள அரசின் உளவுத்துறை சமீபத்தில்
கண்டுபிடித்துள்ளது.
அதுமட்டுமின்றி, பொது மக்களின் நெருங்கிய தொடர்பு இன்றி, தனியாக
இருக்கும் இந்த படகு இல்லங்கள் தீவிரவாதிகளின் புகலிடமாகவும்
பயன்படக்கூடும் என மாநில உளவுத்துறை கருதுகின்றது. எனவே மாவட்ட துறைமுக அதிகாரி மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இது தொடர்பாக
உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஆலப்புழா மாவட்ட கலெக்டர்
பத்மகுமார் உத்தரவிட்டுள்ளார்.
Comments