அல்வா சாப்பிட்ட குழந்தைகள் பாதிப்பு

பண்ருட்டி: பண்ருட்டி அருகே, தெருவில் விற்ற அல்வாவை வாங்கிச் சாப்பிட்ட, 16 குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம், சோமாசுபாளையம் பகுதியில், நேற்று முன்தினம் மாலை, தெருவில் விற்ற அல்வாவை, அப்பகுதி மக்கள் வாங்கிச் சாப்பிட்டனர்.
அல்வா சாப்பிட்ட, 2 வயது குழந்தை உட்பட, 16 குழந்தைகளுக்கு, இரவு 7:00 மணி முதல் வயிற்றுப் போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு வயிற்றுப்போக்கு அதிகரித்ததால், '108' அவசர கால ஆம்புலன்ஸ் மூலம், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

Comments