சென்னை: தேனி மாவட்டம், குடுவாலைப்பட்டியைச் சேர்ந்த பார்த்திபன் என்ற 26
வயது வாலிபர், பப்புவாகுனியாவிலிருந்து வந்தார். அவரிடம் எபோலா வைரஸ்
அறிகுறி இருப்பதாக கூறி, அவரை அரசு மருத்துவ மனையில் தனியாக ஒரு வார்டில்
சேர்த்து, அவரின் ரத்த மாதிரியை எடுத்த சோதனை நடத்தினர். இதில், எபோலா
வைரஸ் கிருமிகள் இல்லாததால், பார்த்திபனை மருத்துவமனையில் இருந்து
டாக்டர்கள் டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். தொடர்ந்து அவரை 21 நாட்கள் கண்காணிக்க
வேண்டும் என தேனி மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது .
Comments