திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், தென்காசி அருகில் தனியார் கலை மற்றும்
அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் மாணவியை, அக்கல்லூரி
நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் பாலியல் கொடுமைபடுத்தியதாக தெரிய வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் நடவடிக்கை எடுக்க கோரினர். இந்நிலையில்,
கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இது குறித்து பொதுமக்கள்
கூறுகையில், மாணவி பாலியல் பலாத்காரத்தை மறைக்க கல்லூரி நிர்வாகம் முயற்சி
செய்து வருகிறது,' என்றனர்.
Comments