புதுடில்லி : டில்லியில், 19 வயது இளம்பெண்ணை கடத்தி, பாலியல் பலாத்காரம்
செய்து, கொடூரமான முறையில் கொன்ற மூன்று பேருக்கு, மரண தண்டனை விதித்து,
டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கொடூரர்கள் : டில்லி
அருகேயுள்ள குர்கானில், சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த, 19 வயது
இளம் பெண்ணை, 2012 பிப்ரவரி, 9ம் தேதி கடத்திய, ராகுல், 27, ரவி, 23,
மற்றும் வினோத், 23, என்ற மூன்று பேர்,
அவரை பாலியல் பலாத்காரம் செய்த
தோடு, அந்தப் பெண்ணின் கண்களில், 'ஆசிட்' ஊற்றி, பிறப்பு உறுப்பில்,
மதுபாட்டிலை செருகி, கொடூரமான முறையில் கொன்றனர். பின், அப்பெண்ணின் உடல்,
அரியானா மாநிலம், ரேவாரி மாவட்டத்தில் உள்ள வயல்வெளியில் கண்டு
பிடிக்கப்பட்டது. இந்த வழக்கில், பிப்ரவரி, 19ம் தேதி தீர்ப்பு வழங்கிய
கீழ்நீதிமன்றம், 'கொடூர குற்றம் புரிந்த இந்த மூன்று பேரும், சமூகத்திற்கு
ஆபத்தானவர்கள். அவர்களுக்கு, ஆயுள் தண்டனை விதிப்பது போதாது. அதனால், மரண
தண்டனை விதிக்கப்படுகிறது' என, தெரிவித்தது. இந்த தண்டனையை எதிர்த்து,
மூன்று பேர் சார்பிலும், டில்லி உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல்
செய்யப்பட்டது. அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதிகள் பிரதீப் நந்த்ரஜாக்
மற்றும் முக்தா குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமான முறையில் கொன்ற மூன்று
பேருக்கும், கீழ்கோர்ட், மரண தண்டனை விதித்தது சரியானதே. அரிதிலும்
அரிதானது இவர்கள் மூவரும் புரிந்தது கொடூரமான குற்றம் என்பதால், இந்த
வழக்கு, அரிதிலும் அரிதானது என்பதை மறுப்பதற்கு இல்லை. இதுபோன்ற நபர்களிடம்
இருந்து, சமூகத்தைப் பாதுகாக்க வேண்டும் எனில், மூவருக்கும் மரண தண்டனை
அளிப்பதே சரியானதாக இருக்கும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Comments