இலங்கைக்கு சுஷ்மா சுவராஜ் கண்டனம்

புதுடில்லி: தமிழக முதல்வரை தரக்குறைவாக விமர்சித்து இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் கட்டுரை வெளியான விவகாரத்தில், இலங்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இன்று ராஜ்யசபாவில் அமளிக்கிடையே பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இது மிகவும் 'சீரியஸ்' ஆன விஷயம். இவ்விவகாரத்தில் இந்தியா, இலங்கைக்கு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. விரைவில் இது தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதரை அழைத்து விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்தார்.
இதே போல், லோக்சபாவில் பேசிய பார்லி., விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, இலங்கையின் இந்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இதை அரசு கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

Comments