சென்னை: பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேயே கட்ஜூ மன்னிப்பு கேட்க
வேண்டும் என தி.மு.க., வலியுறுத்தியுள்ளது. தி.மு.க., தலைவர் கருணாநிதி
தனது சொத்துக்கணக்கை வெளியிட வேண்டும் என பிரஸ் கவுன்சில் தலைவர்
மார்க்கண்டேயே கட்ஜூ கூறியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள
தி.முக..,. கருணாநிதியை தனிப்பட்ட முறையில் விமர்சித்த கட்ஜூ மன்னிப்பு
கேட்க வேண்டும் எனவும், அவர் தனது சொத்துக்கணக்கை வெளியிட வேண்டும் எனவும்
கூறியுள்ளது. மேலும் அவர் மீது வழக்கு தொடர ஆலோசனை செய்து வருவதாகவும்
கூறியுள்ளது.
Comments