காங்., எதிர்கட்சி அந்தஸ்து அம்பேல் ; சுப்ரீம் கோர்ட் கதவும் மூடியாச்சு.,

புதுடில்லி: லோக்சபாவில் காங்கிரசுக்கு எதிர்கட்சி அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரும் பொதுநல வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக மத்திய அரசிடம் தான் முறையிட வேண்டும் என்றும் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

சமீபத்திய பார்லி., தேர்தலில் படு தோல்வியை சந்தித்த காங்கிரஸ் கட்சிக்கு எதிர்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காமல் அல்லாடி பெரும் வேதனையில் துடித்து வருகிறது.
மத்திய அரசிடம் கெஞ்சி கேட்டும், இந்த பொறுப்பை இன்னும் பெற முடியவில்லை. குறைந்தது 55 எம்.பி.,க்களாவது இருந்தால்தான் லோக்சபாவில் எதிர்கட்சி அந்தஸ்து பெற முடியும். ஆனால் காங்கிரசிடம் இருப்பதோ 44 உறுப்பினர்கள் மட்டுமே. இதனால் அரசியலமைப்பு சட்டத்தின்படி எதிர்கட்சி அந்தஸ்து வழங்குவதில் சபாநாயகர் தான் முடிவு செய்ய வேண்டும்.

இந்த விவகாரத்திற்காக கோர்ட்டுக்கு போனால் மேலும் மானம் பறிபோகுமே , என்ற காரணத்தினால் சற்று காலம் தாழ்த்தியது காங்கிரஸ். இந்நிலையில் இது மேலும் காங்கிரசுக்கு கிடைத்த சறுக்கலை நினைவுப்படுத்துமே என்பதால் கோர்ட்டுக்கு செல்லாமல் காலம் தாழ்த்தியது. இந்நிலையில் காங்., தரப்பில் இல்லாமல் பொதுநல வழக்காக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எதிர்கட்சி அந்தஸ்து வழங்கிட ஆணையிடுங்கள் என்றும் கோரப்பட்டது.

நாங்கள் தீர்க்க முடியாது: இந்த மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில், அரசியல் பிரச்னையை நாங்கள் தீர்க்க முடியாது. இதில் நாங்கள் காலவிரயம் செய்ய முடியாது. அரசியல் விவகாரங்களுக்கு தீர்வு சொல்ல நாங்கள், நீதிபதிகளாக இங்கே உட்காரவில்லை. மேலும் சபாநாயகரின் முடிவு எடுக்கும் விஷயத்தில் கோர்ட் திருத்தம் செய்யும் உரிமை இல்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Comments