புதுடில்லி: கங்கை நதி இன்னும் மூன்றாண்டுகளில் சுத்தப்படுத்தப்படும்
என மத்திய அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார். டில்லியில் நிருபர்களிடம்
பேசிய அவர், இன்னும் மூன்றாண்டுகளில் கங்கையை சுத்தப்படுத்தும் வகையில்
பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார். மேலும், கங்கையில் தொழிற்சாலை
கழிவுகள், சுற்றுச்சூழல் மாசுபாடுகளை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருவதாகவும் அவர் கூறினார்.
Comments