அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:கடந்த 2000த்தில் துவக்கப்பட்ட, அரசுக்கு சொந்தமான, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், மோசமான நிதி நிலைமையால், போட்டியை சமாளிக்க முடியாமல் தள்ளாடுகிறது.
தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொண்டு, இந்த நிறுவனத்திற்கு புத்துயிர் ஊட்டுவோம்.பிற தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு சாதகமாக, பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளில் சிலர் செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. அதுகுறித்து கண்காணித்து வருகிறோம்.இவ்வாறு அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
Comments