பா.ஜ., பேசுவதை பேசி விட்டு போகட்டும்: சோனியா

புதுடில்லி: பா.ஜ.,வினர் அவர்கள் பேச விரும்புவதை பேசிவிட்டு போகட்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா தெரிவித்துள்ளார். லோக்சபாவில் இன்று ராகுல் ஆவேசமாக நடந்து கொண்டது குறித்து கருத்து தெரிவித்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி, காங்கிரசில் ராகுலை புறக்கணித்துவிட்டு பிரியங்காவிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள சோனியா, பா.ஜ.,வினர் தாங்கள் என்ன பேச வேண்டும் என்று நினைக்கின்றனரோ, அதை பேசி விட்டு போகட்டும் என தெரிவித்துள்ளார்.

Comments