இந்தியா -பாகிஸ்தான் இடையே, போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறை அமலில் உள்ளது. ஆனால், பாக்., ராணுவம், இந்த விதிமுறைகளை மதிக்காமல், தொடர்ந்து, அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்தியா தான் அமைதி ஒப்பந்தத்தைமீறி தாக்குதல் நடத்தி வருவதாக பாகிஸ்தøான் ராணுவம் புகார் கூறியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான்ராணுவம் வெளியிட்ட செய்தியில், இந்தியா தான் அமைதிஒப்பந்தத்தை மீறியுள்ளது.கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரை 140 முறை இந்தியா அமைதி ஒப்பந்தத்தை மீறியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 20 முறை தன்னிச்சையாக இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது.ஆகஸ்ட்23ம் தேதி 20வது முறையாக இந்தியா தாக்குதல்நடத்தியது. தங்கள்நாட்டு ராணுவத்தினரை தாங்கள் கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். இந்திய ராணுவத்தின் அத்துமீறல் குறித்துஇந்திய அரசிடம் புகார் கூறப்பட்டுள்ளது. இந்திய அரசு தான்நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளது.
Comments