தக்காளி விலை கிடுகிடு உயர்வு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் கடந்த சில மாதங்களாக உள்ளூர் தக்காளி வரத்து இல்லாததால், தக்காளி விலை பெட்டிக்கு (14 கிலோ) ரூ.380 என்று விற்கப்பட்டு வந்தது. கடந்த 3 நாட்களாக பெரியகோட்டை பகுதியில் இருந்து உள்ளூர் தக்காளி மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. இருந்த போதிலும் தக்காளியின் பயன்பாடு அதிகரித்து கொண்டே போனதால், விலையும் ஏறுமுகமாக காணப்பட்டது. இன்று ஒரு பெட்டி தக்காளியின் விலை ரூ.40 அதிகரித்து ரூ.420 க்கு விற்றது. தக்காளியின் தேவை குறையாமல் உள்ளதால், விலை குறைய வாய்ப்பில்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Comments