' மோடி பொறுப்பேற்ற பின் கலவரமாம்'- கண்ணீர் விடுகிறார் சோனியா

திருவனந்தபுரம்: பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்னர் நாட்டில் மதக்கலவரங்கள் பெருகி இருப்பதாக காங்., தலைவர் சோனியா குற்றம் சாட்டியுள்ளார். பிரதமராக மோடி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பின்னர் சோனியா தெரிவிக்கும் முதல் குற்றச்சாட்டு ஆகும்.காங்., தலைவர் சோனியா இன்று திருவனந்தபுரத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசுகையில், மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் இன, மத, ரீதியான மோதல்கள் அதிகரித்துள்ளது.
குறிப்பாக உத்திர பிரதேசத்தில் இது பெரும்வாரியாக நடந்துள்ளது. கடந்த 11 வாரத்தில் 600 மோதல்கள் நடந்துள்ளது.

எங்களின் தலைமையிலான ஆட்சியின் போது இது போன்ற வன்முறை சம்பவங்கள் நடக்கவில்லை. மோடி கால மோதல்கள் கவலை அளிக்கிறது. சமீபத்திய ராஜ்யசபா கூட்டத்தில் காங்., உறுப்பினர்கள் மத மோதல்கள் குறித்து பேசினர். நாட்டின் பிரிவினை வாத சக்திகளுக்கு எதிராக கடுமையாக நாங்கள் போராடுவோம். இவ்வாறு சோனியா கூறியுள்ளார்.

Comments