விஜயகாந்திடம் நலம் விசாரித்த நெப்போலியன்!

தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் நெப்போலியன். தேமுதிக. தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன் பிறகு தனது பிறந்த நாளையொட்டி கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.


இன்று காலை விஜயகாந்தை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்துக்கு சென்று நடிகர் நெப்போலியன் சந்தித்து பேசியுள்ளார். விஜயகாந்திடம் நெப்போலியன் உடல் நலம் விசாரித்தார். இருவரும் 20 நிமிடங்கள் நடைபெற்ற சந்திப்பின் போது அரசியல் சூழ்நிலைகள் குறித்து அவர்கள் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Comments