முதல்முறை கத்திக் குத்து வாங்கும்போதுதான் அதிகமாக வலிக்கும்! காதல் தோல்விப்பற்றி சிம்பு!!

Simbu speaks about his love failuresடி.ராஜேந்தர் ஒரு படத்தில் காம்பை விட்டு பூ உதிர்ந்தால் மீண்டும் அங்கு பூப்பதில்லை. காதலித்து தோல்வி என்றால் மீண்டும் அங்கே காதல் இல்லை என்று பாட்டெழுதி நடித்திருந்தார். ஆனால் அப்படிப்பட்டவரின் மகனான சிம்புவோ ஒரு முறைக்கு இரண்டு முறை காதலித்து விட்டார். நயன்தாரா, ஹன்சிகா என்ற இரண்டு நடிகைகளை காதலித்து காதலை முறித்தும் கொண்டார்.


இந்த நிலையில், அவரது முதல் காதலியான நயன்தாராவுடன் இது நம்ம ஆளு படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்து வரும் சிம்புவுக்கு அவருடன் மீண்டும் காதல் மலர்ந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதுபற்றி எந்த பதிலும் தெரிவிக்கவில்லை சிம்பு. மாறாக, அதுகூட படத்திற்கு ஒரு பப்ளிசிட்டிதான் என்று விட்டு விட்டார்.

இந்த நிலையில், அவர் விடுத்துள்ள ஒரு செய்தியில், இரண்டு முறை காதலித்து பெரிய அனுபவ பாடத்தை கற்றுக்கொண்டேன். அதோடு, முதல் காதல் தோற்றபோது ரொம்ப வலித்தது. ஆனால் இரண்டாவது முறை தோற்றபோது வலிக்கவில்லை. காரணம் முதல்முறை கத்திக்குத்து வாங்கும் போதுதானே அதிகமாக வலிக்கும்.

மேலும், இப்போது எனது மனசு பக்குவம் அடைந்து முதிர்ச்சியான நிலையில் இருக்கிறது. அதனால் ஆன்மீக வழியில் சென்று கொண்டிருக்கிறேன் என்று சொல்லும் சிம்பு, 45 வயதில் அடைய வேண்டிய மனப்பக்குவம் எனக்கு 29 வயதிலேயே ஏற்பட்டு விட்டது. அதனால் இப்போது மனம் ஒருநிலைப்பட்டு ஆன்மீகத்தில் அதிகமாக மனசை திருப்பி வருகிறேன் என்கிறார்.

Comments