கடைகளின் பூட்டை உடைத்து தக்காளி கொள்ளை

குர்ஜா:உத்தரபிரதேச மாநிலம், புலந்தசாகர் மாவட்டத்தில்,உள்ள குர்ஜா நகரில் ஐந்து கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு வியாபாரிகள அதிர்ச்சி அடைந்தனர்.பூட்டு உடைக்கப்பட்ட ஐந்து கடைகளிலும் இருந்து, 55 கிலோ தக்காளி கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இந்த கடைகளில் தக்காளியை தவிர, விலையுயர்ந்த பொருட்களும், பணமும் இருந்தன. ஆனால், அவை அப்படியே இருந்தன.அத்துடன் அருகில் இருந்த மற்றொரு கடையில் இருந்த, ஆட்டிறைச்சியையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.நாளுக்கு நாள், தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக, கொள்ளையர்கள், தக்காளியை திருடிச் சென்றுள்ளதாக கூறிய வியாபாரிகள், கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.

Comments