காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுடனான அப்துல் பசித் தின் சந்திப்பை அடுத்து, இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெறுவதாக இருந்த வெளியுறவுத்துறை செயலர் மட்டத்திலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக டில்லியில் நிருபர்களிடம் பேசிய அப்துல் பசித், இந்திய துணைக்கண்டத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே பாகிஸ்தானின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. அமைதிக்கு பங்கம் ஏற்படும் எந்தவொரு செயலிலும் பாகிஸ்தான் ஈடுபடாது. எங்களின் பிரதமர் எண்ணமும் அதுவே. அவ்வாறே நாங்கள் செயல்படுவோம். இந்தியாவுடனான பிரச்னைகள் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்படும். செப்.9 தாக்குதலுக்குப்பின் பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறது. விரைவில் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் விரட்டியடிக்கப்படுவார்கள்.
ஜம்மு - காஷ்மீர் விவகாரம் இருநாடுகளுக்கும் இடையிலான ஒன்றை ஒன்று சார்ந்த பிரச்னை ஆகும். இதனை இருநாடுகளும் ஒத்து கொண்டுள்ளன. பிரிவினைவாதிகள் சந்தித்தது என்பது நீண்ட காலமாக இருந்து வரும் வழக்கம்தான். இவ்வாறு பசித் தெரிவித்தார்.
Comments