இதையடுத்து அந்த மர்ம ஆசாமி என் கையில் இருந்த கைப்பேசியை பிடுங்கிக் கொண்டு தப்பி ஓடிவிட்டான் என தெரிவித்துள்ளார். இந்த புகாரையடுத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த பொலிசார், அவன்
பறித்துச் சென்ற கைப்பேசியை கண்காணித்துள்ளனர்.அப்போது அவன் ஆசாமி
சென்னையில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் கோயம்பேடு பகுதியில் சுற்றி திரிந்த நபரை சந்தேகமடைந்து
காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது அவன் தான் இந்த செயல்களில் ஈடுபட்டவன் என்பது தெரியவந்துள்ளது. விசாரணையில், அந்த நபர் நெற்குன்றம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த சதீஷ் (33) என்று தெரியவந்துள்ளது.
பகலில் பெயின்டர் வேலைக்கு செல்லும் இவன், நள்ளிரவு 12 மணிக்கு
விழித்துக்கொண்டு நெற்குன்றம் பகுதியில் அங்குள்ள வீடுகளில் பெண்கள் எந்த
வீட்டில் தனியாக இருக்கிறார்கள் என்று பார்த்து கொள்வான். வீட்டில் உள்ள ஆண்கள் மார்க்கெட்டிற்கு அதிகாலை 3 மணிக்கு எழுந்து
சென்றவுடன், திடீர் என்று அந்த வீட்டிற்குள் நுழைந்து பெண்ணிடம் கத்தியை
காட்டி தன் ஆசைக்கு இணங்க வைப்பான். தனது ஆசை தீர்ந்தவுடன் அங்கிருக்கும் பொருட்களை எடுத்து செல்லும் இவன்,
இதுவரை 10க்கும் மேற்பட்ட பெண்களிடம் இது போன்று நடந்ததாக
தெரிவித்துள்ளான். மேலும், பொலிசார் அந்த நபர் மீது மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
Comments