இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநில பா.ஜ.க., தலைவர் ஜுகல் கிஷோர் சர்மா பத்திரிகையாளர்களிடம் நேற்ற கூறியதாவது, பிரிட்டிஷ் பார்லிமென்டின் கீழவையான பொதுமக்கள் சபையில், காஷ்மீர் மனித உரிமை விவகாரம் தொடர்பாக சிறப்பு விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பது இந்தியாவின் உள்விவகாரத்தில் அப்பட்டமாக தலையிடுவது போன்றதாகும். இதை பா.ஜ.க., கடுமையாகக் கண்டிக்கிறது.
ஜம்மு-காஷ்மீர் விவகாரம் என்பது முடிந்து போன விஷயமாகும். அதை மீண்டும் எழுப்புவதை ஏற்க முடியாது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருக்கும் சிறுபான்மையினர் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது குறித்து பிரிட்டிஷ் பார்லிமென்ட் விவாதித்தால், அதை பா.ஜ.க., வரவேற்கும்.
சிறப்பு விவாதம் வேண்டும்:
டேவிட் வார்ட்,பிரிட்டன் பார்லிமென்ட் உறுப்பினர், இவர், காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து விட்டதாகவும், இதுகுறித்து பிரிட்டன் பார்லிமென்டின் கீழவையான பொதுமக்கள் சபையில் சிறப்பு விவாதம் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்தார். இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து சிறப்பு விவாதம் நடத்த பிரிட்டன் பார்லிமென்டில் பொதுமக்கள் சபை ஒப்புக் கொண்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments