இஸ்லாமாபாத்: பாகிஸ்தான்பிரதமர்நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும் என
வலியுறுத்தி வரும் எதிர்க்கட்சியினரின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
அவர்கள் பிரதமர் வீட்டைநோக்கி பேரணியாக சென்றனர். பார்லிமென்ட்
வளாகத்திற்குள் நுழைந்தனர். இதனையடுத்து அவர்கள் மீது போலீசார்
துப்பாக்கிச்சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டை வீசியும் தாக்குதல்
நடத்தினர். இதில் 7 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இதனால்
அங்கு நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. போராட்டக்காரர்கள் கடைகளை
சூறையாடியுள்ளனர். ஜியோ டிவி அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து
ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
Comments