பார்லி.யில் பங்கேற்காதது ஏன்: சச்சின் விளக்கம்

புதுடில்லி: எம்.பி.யாக சச்சின் பார்லி.யில் ஒரு கேள்வி கூட கேட்வில்லை. நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்காதது குறித்து விமர்சனத்திற்குள்ளனார்.

இது தொடர்பாக இன்று டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது:, என்னை பற்றிவிமர்சனங்கள் தேவையில்லாதது. பார்லி.யில் பங்கேற்காதது எனது தனிப்பட்ட விஷயம் . இது குறித்து என்னிடமே யாரும் கேள்வி கேட்கவேண்டியதில்லை. இதற்காக நான் யாரையும் குறைசொல்லவோ, எந்த அமைப்பினையும் அவமதிக்கவோ விரும்பவில்லை. என்னுடைய சகோதரரின் மருத்துவ சிகிச்சை காரணமாகவே சென்றதால் பார்லி., விவகாரங்களில் பங்கேற்க முடியவி்ல்லை என தெரிவி்த்தார்.

Comments