பிரசாரத்திற்கு செல்லாமல் என்னவாகும்? பலப்பரீட்சையில் சோனியா- ராகுல்

லக்னோ: தொடர்ந்து தோல்வியே சந்தித்து வந்துள்ள காங்கிரஸ் வரவிருக்கும் உ .பி,. மாநில இடைத்தேர்தலில் வெற்றியோ , தோல்வியோ யார் பொறுப்பேற்பது என்ற நிலையை தள்ளிப்போட காங்., தலைவர் சோனியா பிரசாரத்தை தவிர்த்துள்ளார். இது போல் காங்., துணை தலைவர் ராகுலும் பிரசாரத்திற்கு செல்ல மாட்டார் என்று கட்சி வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.


வரும் செப்.13 ம் தேதி உ .பி., மாநிலத்தில் 12 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. நொய்டா, கிழக்கு லக்னோ, ஷகரான்பூர்நகர் (சமீபத்தில் கலவரம் நடந்த பகுதி), பிஜனூர், தாக்கூர் தவாரா, நிகாசன், ஹமீர்பூர், ஷார்கான், ஷிரத்து, பால்கா, ரோகானியா, ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடர்ந்து நடைபெற்று 27ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்தலில் காங்., தரப்பில் நட்சத்திர பேச்சாளர்கள் மோதிலால்வோரா, திக்விஜயசிங், பூபிந்தர்ஹூடா, ராஜ்பாப்பர், குலாம்நபி ஆசாத், பெனி பிரசாத் வர்மா உள்ளிட்டோர் பிரசாரம் செய்கின்றனர். ஆனால் ராகுல், சோனியா, பிரியங்கா யாரும் பிரசாரத்திற்கு செல்லாமல் தவிர்த்து விட்டனர். உ.பி.,யில் காங்கிரஸ் தனித்தே போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது,

சமீபத்திய பீகார், உ .பி,. தேர்தலில் ராகுல் பொறுப்பேற்று பெரும் தோல்வியை சந்தித்தது காங்., இதற்கு ராகுலே பொறுப்பு என்று கட்சி மூத்த நிர்வாகிகள் முணுமுணுத்தனர். எனவே இந்த பெயரை தவிர்க்கவே ராகுலும், சோனியாவும் பிரசாரம் செய்யாமல் ஒதுங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Comments