முக்கிய பிரமுகர்களை கொல்ல சதி; பயங்கரவாதிகள் தயாரித்த விஷ கடிதம்


புதுடில்லி: இந்தியாவில் சில முக்கிய வி.ஐ.பி.,க்ளுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பி அதன் மூலம் அவர்களை கொல்ல பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியதாக டில்லி போலீசார் கோர்ட்டில் இன்று தாக்கல் செய்த கூடுதல் குற்றச்சாட்டில் பதிவு செய்துள்ளனர்.

டில்லியில் சட்டத்திற்கு புறம்பாக ஆயுத விற்பனை மற்றும் தயாரிப்பு குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக 6 பயங்கரவாதிகள் மீது வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கில் தெசின்அக்தர், முகம்மது வாகர் அஷார் கைது செய்யப்பட்டனர். இந்த இருவர் இடையே நடந்த உரையாடலில் விஷம் தடவிய கடிதம் தலைவர்களுக்கு அனுப்பிட முயற்சித்தோம். இதற்கென தேவைப்படும் மெக்னீசியம் சல்பேட், அசிடோன், ஆமணக்கு கொட்டை, ஆகியவற்றை பெற பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். மேலும் அவர்களிடம் கைப்பற்றப்பட்ட இது போன்ற கெமிக்கல் பொருட்களை கோர்ட்டில் , போலீசார் ஒப்படைத்தனர்.

டில்லி கூடுதல் நீதிபதி ரித்தீஷ்சிங் முன்பு இந்த சார்ஷீட் பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2011 ல் கைது செய்யப்பட்ட இந்த குற்றவாளிகள் தாஜ்மகால், ஆக்ரா கோட்டை மற்றும் ராஜஸ்தானில் பாரத்பூர் ஆகிய இடங்களை தகர்க்க திட்டமிட்டிருந்தனர் என்பதும் தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். குற்றவாளிகள் அனைவரும் இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments