ராஜ்யசபாவுக்கு வராத சச்சின் மீது எம்.பி.,க்கள் பாய்ச்சல்: விடுமுறை விண்ணப்பத்தை அனுமதித்தார் குரியன்

புதுடில்லி:ராஜ்யசபா நிகழ்ச்சிகளில், பல நாட்களாக பங்கேற்காத, பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு, நேற்றும் சபையில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகை ரேகா ஆகியோர், 2012ல், காங்., சார்பில், ராஜ்யசபா எம்.பி.,க்களாக நியமிக்கப்பட்டனர்.
அதன்பின், இவர்கள், ராஜ்யசபா நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, அரிதாக உள்ளது என, கடந்த வாரம், சபையில், எம்.பி.,க்கள் பலர் குற்றம் சாட்டினர்.

Comments