கச்சத்தீவில் விநாயகர் சிலை?: பதற்றம்

ராமேஸ்வரம்: கச்சத்தீவில் விநாயகர் சிலையை வைக்க, ராமேஸ்வரம் வந்த பாரத் சேனா நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. கச்சத்தீவில் விநாயகர் சிலை வைப்பதற்காக ராமேஸ்வரத்திற்கு பாரத் சேனா அமைப்பினர் ரயிலில் வந்திறங்கினர். அவர்களது கையில், ஒன்றரை அடி உயரமுள்ள விநாயகர் சிலை இருந்தது. இவர்கள் கச்சத்தீவுக்கு செல்வதை தடுக்கும் பொருட்டு மத்திய, மாநில உளவு போலீசார், ராமேஸ்வரம் சட்டம், ஒழுங்கு போலீசார், மரைன் போலீசார் என 40 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுதவிர, அக்னி தீர்த்த கடலில் அதிவேக மரைன் படகு ஒன்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. போலீஸ் கெடுபிடியால் விநாயகர் சிலையை அக்னி தீர்த்த கடலில் கரைத்து விட்டு, பாரத் சேனா அமைப்பினர் திரும்பினர்.

Comments