எங்கிருந்தாலும் தாவூத் இப்ராஹிமை கைது செய்வோம்: ராஜ்நாத் சிங் உறுதி

புதுடில்லி:தாவூத் இப்ராஹிமை கைது செய்ய மத்திய அரசு அனைத்து முயற்சியும் எடுத்துவருகிறோம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். 300க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய 1993 ஆம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் சூத்திரதாரியாக இருந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தான் உளவுத்துறையின் ஆதரவுடன் அங்கேயே வசித்து வருவதாக சொல்லப்படுகிறது.


பாகிஸ்தானின் அபோட்டாபாத் பகுதியில் அமெரிக்கா நடத்திய அதிரடி தாக்குதலில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு பாகிஸ்தானில் இருந்து தப்பியோடிய தாவூத் இப்ராஹிம் தற்போது துபாயில் இருப்பதாகவும் உறுதிப்படுத்த முடியாத சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பார்லிமென்ட்டில் உள்துறை அமைச்சகம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், தாவூத் இப்ராஹிமை கைது செய்ய மத்திய அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. எங்கிருந்தாலும் நாங்கள் கைது செய்வோம் என்று தெரிவித்தார்.

Comments