அனுமதியின்றி ஆழ்குழாய் தோண்டினால் 7 ஆண்டு சிறை

சென்னை: தமிழகத்தில் அனுமதியின்றி, ஆழ்குழாய் கிணறு தோண்டினால் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் சட்ட திருத்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்தார். அதில், அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறுகளை தோண்டுபவர்களுக்கு, 3 ஆண்டு முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Comments