ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.61.29

மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(ஆகஸ்ட் 13ம் தேதி) சரிவை சந்தித்துள்ளது. உலகளவில் டாலரின் மதிப்பு உயர்ந்து பிறநாட்டு கரன்சிகளின் மதிப்பு சரிந்ததாலும், இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரித்து இருப்பதாலும் ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ.61.29-ஆக இருந்தது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு ரூ.61.08-ஆக இருந்தது.

Comments