வழக்கின் சாராம்சம் என்ன ? இது தொடர்பான வழக்கில் சி.பி.ஐ.,வக்கீல் வேணுகோபால் கோர்ட்டில் கூறியிருந்ததாவது:
கடந்த 2004 -2007 காலகட்டத்தில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்தார். அப்போது, ஏர்செல் தனது சேவையை விரிவாக்கம் செய்வதற்காக பல்வேறு இடங்களுக்கான உரிமம் கேட்டு தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்துக்கு விண்ணப்பம் செய்தது. ஏர்செல் நிறுவனத்தோடு மேலும் இரு நிறுவனங்களும்உரிமம் கேட்டு விண்ணப்பித்தன. உரிமம் வழங்குவதற்காக, ஏர்செல் நிறுவனத்திடம், தேவையில்லாத, முக்கியத்துவம் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டன. விசாரணைகள் நடத்தப்பட்டன. ஆனால், இந்த நடைமுறையை மற்ற இரு தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம், அமைச்சகம் மேற்கொள்ளவில்லை. அவர்களுக்கு உடனடியாக உரிமம் வழங்கப்பட்டுவிட்டது. அதே நேரம், ஏர்செல்லுக்கு உரிமம் வழங்குவதில் இழுத்தடிப்பு நடந்தது.
இவ்விவகாரத்தில் சி.பி.ஐ., யின் முதற்கட்ட விசாரணையில், தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் அமைச்சர், ஏர்செல் நிறுவனத்திற்கு நிர்பந்தம் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளைவிற்கும்படி, ஏர்செல்லின் அப்போதைய அதிபர் சிவசங்கரன் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இறுதியில் மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் பங்குகளை விற்பதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை. அந்த நெருக்கடியின் விளைவாக, ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்ற பின்தான், ( 2006, மார்ச் மாதத்திற்கு பின்) ஏர்செல் நிறுவனத்திற்கான ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கும் நடவடிக்கைகள் துவங்கின. இவ்வாறு சி.பி.ஐ., வக்கீல் குற்றச்சாட்டை பதிவு செய்தார்.
சன் குழுமத்தில் 600 கோடி முதலீடு: ஏர்செல் நிறுவனம் விற்கப்பட்டதும் , ஸ்பெக்ட்ரம் கைமாறியதும், மேக்சிஸ்ஸின் துணை நிறுவனம் மூலம் சன் குழுமத்தில் 600 கோடியை முதலீடு செய்தது. இந்த முதலீடு என்ன காரணத்தினால் எந்த ரூபத்தில் நடந்தது என்பது கேள்வி எழுப்ப பட்டது. சி.பி.ஐ,., தொடர்ந்து பல மாதங்களாக தயாநிதி தொடர்பான விவரத்தை சேகரித்து வந்தது. அவருக்கு நெருங்கிய தொலை தொடர்பு அதிகாரிகள் விசாரிக்கப்பட்டனர். இவர்களும் தயாநிதி காலம் தாழ்த்திய விஷயத்தை ஒத்துக்கொண்டனர். இந்த அடிப்படையில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தயாநிதி மீதான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக அட்வகேட் ஜெனரல் இவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யலாம் என தனது ஒப்பினியன் தெரிவித்திருந்தார்.

Comments