5வயதுசிறுமிக்கு பாலியல் கொடுமை:பள்ளி வேன் டிரைவர் கைது

புதுடில்லி:5வயது பள்ளி சிறுமியை பாலியல் கொடுமைபடுத்திய வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில் தெற்கு டில்லியில் பாதுகாப்பு படை காலனியில் அரசு பள்ளி உள்ளது. இங்கு படித்து வந்த 5 வயது சிறுமியை வேன் டிரைவர் பாலியல் கொடுமை படுத்தியதால் அச்சிறுமி பள்ளி செல்லாமல் உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்தாள். அப்போது வேன் டிரைவர் பள்ளிக்கு அழைத்துசெல்ல வந்தான்.இந்நிலையில் அச்சிறுமி பள்ளிக்கு செல்லமுடியாமல் சோர்வாக இருந்ததால் அவளது தயார் விசாரித்தபோது நடந்தைதை கூறிவிட்டதால் புகாரின் பேரில் வேன் டிரவைரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் கடந்த 10 நாட்களுக்கு முன் நடந்துள்ளது என்பது தெரிவந்தது.

Comments