பெரிய கடற்படை:
இந்திய கடற்படை என்பது, உலகின் மிகப் பெரிய கடற்படைகளில் ஒன்றாகும்.
மேலும் 40 போர்க் கப்பல்கள்:
இருப்பினும், பரந்த, நீண்ட கடல் பரப்பு கொண்ட இந்தியாவிற்கு இவை போதுமானதாக இல்லை. மேலும், கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக ஆபத்துக்கள் வருவதால், இந்திய கடற்படையை மேலும் பலமுள்ளதாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, மேலும் 40 போர்க் கப்பல்களை கட்ட, கடற்படை ஆர்டர் கொடுத்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி பதவி ஏற்ற பின்னர், ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் கோல்கட்டா மற்றும் ஐஎன்எஸ் கமோர்த்தா ஆகிய போர்க்கப்பல்கள் நாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. மேலும், நாசகாரி நீர்மூழ்கி கப்பல் ஒன்றும் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாஸ்கான் டக்ஸ் என்ற நிறுவனம், இந்திய கடற்படைக்காக அதிநவீன நீர்மூழ்கி கப்பல் ஒன்றை கட்டி வருகிறது. இதன் தற்போதைய நிலையை அறிய மத்திய நிதி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் அருண்ஜெட்லி பார்வையிட உள்ளார். இவருடன் கடற்படை தளபதி அட்மிரல் ராபின் தோவானும் செல்கிறார். பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு, பாதுகாப்பு துறை சம்பந்தமான அனைத்தும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
உள்நாட்டில் தயாரிக்க முடிவு:
இதையடுத்து, சர்வதேச அளவில் போர் விமானங்கள், போர் கப்பல்கள் மற்றும் ஆயுத, கவச வாகனங்கள் உள்ளிட்டவைகளை தயார் செய்யும் பிரபல நிறுவனங்கள், இந்தியாவில் தங்கள் தயாரிப்புக்களை தயாரிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் மிக விரைவில் இந்தியாவில் தங்கள் உற்பத்தியை துவங்க உள்ளன. இதன் மூலம் இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை சர்வதேச தரத்திற்கு வலிமை வாய்ந்ததாக உருவெடுக்கும் என்று கருதப்படுகிறது.
Comments