நியூயார்க் : ஆழ்கடல் உயிரியான ஆக்டோபஸ், தன் குஞ்சுகளை பொரிக்க,
நான்கு ஆண்டுகள் அடைகாப்பதாக, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
இதுகுறித்து
விஞ்ஞானிகள் கூறியதாவது: கடந்த 2007ல், மத்திய கலிபோர்னிய கடல் பகுதியில்,
1,400 மீட்டர் ஆழத்தில், கென்ய நீர்மூழ்கிக் கப்பலில் சென்று,
'ரிமோட்'டால் இயங்கும் கேமரா உதவியுடன், ஆக்டோபஸ் இனப்பெருக்கம் குறித்த
ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆக்டோபசின் முட்டை களில் இருந்து குஞ்சுகள்
வெளிவருவதைக் காண, ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டி
இருந்தது. இதில், 18 முறை, ஆக்டோபஸ் இருந்த பகுதி ஆய்வு செய்யப்பட்டது.
ஆனால், அடைகாத்த நிலையில் இருந்த ஆக்டோபஸ், சிறிதளவும் மாறாமல், அப்படியே
இருந்தது. குஞ்சுகள் வெளிவரும் வரை, அடுத்த இனப்பெருக்கத்திற்கான
முட்டைகள் இடவில்லை. கடல்வாழ் உயிரினங்களில் குஞ்சுகள் பொரிப்பதில்,
ஆக்டோபஸ் அதிக காலம் எடுத்துக்கொள்கிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Comments